திடீர் மழை சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , போன்ற வட தமிழக மாவட்டங்களில் இன்று திடீரென கனமழை பெய்தது. பிற்பகல் 3.30 மணி அளவில் தென் சென்னை பகுதிகளில் நல்ல மழை பெய்தது, தற்பொழுது வரை இம்மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழைக்கான காரணம் வடக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட குழிவு காரணமாக, இத்தாழ்வு பகுதியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கரையை கடக்கும். இதன் காரணமாக காற்றில் திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது . தமிழக பகுதியில் வடதிசையில் இருந்து வறண்ட காற்றும் மேற்கு திசையில் இருந்து வரும் ஈரப்பதம் நிறைந்த காற்றும் 13° வடக்கு ரேகை அருகே குவிகிறது . இதன் காரணமாகவே இன்று திடீரென இடி மின்னல...