திடீர் மழை
சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , போன்ற வட தமிழக மாவட்டங்களில் இன்று திடீரென கனமழை பெய்தது. பிற்பகல் 3.30 மணி அளவில் தென் சென்னை பகுதிகளில் நல்ல மழை பெய்தது, தற்பொழுது வரை இம்மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மழைக்கான காரணம்
வடக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட குழிவு காரணமாக, இத்தாழ்வு பகுதியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கரையை கடக்கும். இதன் காரணமாக காற்றில் திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது .
தமிழக பகுதியில் வடதிசையில் இருந்து வறண்ட காற்றும் மேற்கு திசையில் இருந்து வரும் ஈரப்பதம் நிறைந்த காற்றும் 13° வடக்கு ரேகை அருகே குவிகிறது . இதன் காரணமாகவே இன்று திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
இக்காற்று குவிதல் நிகழ்வு நாளை காலை வரை நீடிக்கும் என்பதால் நாளை காலை வரை மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது . நாளை முற்பகல்(கு) பின் தெளிவான வானிலை சூழல் நிலவும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
ஓர் நற்செய்தி
தென்மேற்கு பருவமழை மீண்டும் விடை பெற தொடங்கியது. சற்றேற்குறைய 6-7 நாட்கள் விடைபெறுவதில் தடங்கள் ஏற்பட்டது ஆனால் தற்பொழுது விரைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக முன்பே கூறியது போல் வடகிழக்கு பருவமழை Oct26- Oct29 இடையிலான தேதிகளில் துவங்கும்.
நன்றி ☺️
Comments
Post a Comment