பருவமழை மீண்டும் தீவிரமடைகிறது
கடந்த வாரம் தமிழகம் முழவதும் பரவலாக நல்ல மழை பதிவானது. அதன் பின் பருவமழை சற்று நின்று இருந்தது. தற்பொழுது பருவமழை மீண்டும் புயல் வடிவில் புத்துயிர் பெற்றுள்ளது. வங்க கடலில் உருவாகும் நிவார் புயல் (உச்சரிப்பு வேறுபடலாம்) தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.
ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.
நவ 19ஆம் தேதி , தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவானது , அது நவ 20ஆம் தேதி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவானது . இத்தழ்வானது இன்று மேலும் வழுவடைந்து ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருகிறது.
மேலும் தீவிரமடையும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆனது வரும் 12 முதல் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுவடைந்து முதலில் மேற்கு - வடமேற்கு திசையிலும் அதன் பின் வடமேற்கு திசையிலும் நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் வரும் நவ 24ஆம் தேதி இத் தீவிர தாழ்வு மண்டலமானது நிவார் புயலாக வலுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் தீவிரத்தன்மை தற்பொழுது வரை கணிக்க முடியவில்லை ,ஆனால் இதன் தீவிரத்தன்மை நாளை தெளிவாகும்.
நிவார் புயல்.
இந்த வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் வெகு விரைவில் உருவாக உள்ளது. இந்த நிவார் புயலானது வடத்தமிழகத்தில் சென்னைக்கும் - நாகபட்டினத்திர்க்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது . (டெல்டா மாவட்ட அட்ச்சரேகையில் கரையைக் கடக்க 20 முதல் 30% சாதகம் உள்ளது) (டெல்டா மாவட்ட அட்ச்சரேகைக்கு மேல் கரையைக் கடக்க 70 முதல் 80% வரை வாய்ப்பு உள்ளது).
புயலுக்கான சாதகமான சூழல்.
MJO(மேடன் ஜூலியன் அலைவு) - வெப்பமண்டல அலைவுகளின் அரசன் , பகுதி 3ல் சற்று வலுவுடன் (1) நுழைந்து உள்ளது. இதன் காரணமாக வங்க கடலில் நிலவும் அமைப்பிற்கு கிழக்கில் இருந்து ஈரப்பதமான காற்றை வலுப்படுத்தும்.
வங்க கடலில் , கடல் மட்ட வெப்பநிலை 29°-30°C ஆகவும் ,ஒடிசா அருகே 26°-27°C ஆகவும் நிலவி வருகிறது.இந்த வெப்பநிலை சலனத்தை நன்கு அமைய செய்யும்.
TCHP (Tropical Cyclone Heat Potential). இது அமைப்பின் தீவிரத்தையும் அமைப்பின் மழை மேகங்கள் அதிகம் உருவாக காரணமாக அமையும். வங்க கடலில் TCHP 80-90 KJ அளவில் நிலவுகிறது.
The Driving Ridge (steering ridge). இது புயலை வழி நடத்தி செல்லும் மேல் மட்ட அலை ஆகும். பொதுவாக ஒரு புயல் கரையை கடப்பதும் அல்லது கடலிலேயே வலுவிலப்பதை தீர்மானிக்கும் காரணி ஆகும். இம்முறை இப்புயலை தமிழகத்தை நோக்கி நகர்த்துவது இந்தோ - பசிபிக் ரிட்ஜ் ஆகும்.
காற்று தடை . இது புயலை வலுவிழக்க செய்யும் ஒரு காரணி ஆகும். தற்பொழுது கிடைத்த தரவுகள் படி வங்க கடல் பகுதியில் 15 முதல் 20 knots வரை காற்று தடை நிலவுகிறது. ஆனால் இது நாளை அல்லது மறுதினம் குறைந்து விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கதி புயல்.
தென்மேற்கு அரபிக்கடலில் நிலவி வந்த தீவிர தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர கதி புயலாக மாறியது. இது இன்று இரவு முதல் 23ஆம் தேதி விடியற்காலையில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் புயல் கரையை கடப்பதால் மணிக்கு 135 முதல் 145 கிமீ வரை காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்படுகிறது. அதன் பின் சற்று வலுவிழந்து ஏதென் வளைகுடாவில் நிலைகொள்ளும் .
பதிவு தொடங்கிய நேரம் : 21:10
பதிவு முடியும் நேரம் : 00:00
குறிப்பு : இது எனது ஆய்வுகளின் படி உருவான புயல் கணிப்பு மட்டுமே இவை காலத்திற்கேற்ப மாறும். மேலும் இச்சலனம் முடியும் வரை பதிவுகள் தொடரும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு இந்திய வானிலை ஆரய்ச்சி மையத்தை பின் தொடரவும் . மேலும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை அறிய தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் டுவிட்டர் பக்கத்தை அணுகவும்.
நன்றி
Comments
Post a Comment