கனமழை வாய்ப்பு
நேற்று தமிழக கடல் பகுதியில் நிலவி வந்த தலைகீழ் காற்று குழிவு காரணமாக நேற்று முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது . இன்று இச்சலனமானது தற்பொழுது கேரள கடற்பகுதியில் நிலவிவருகிறது. இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் (மாவட்டம் முழுவதும் இல்லாமல் ஆங்காங்கே மழை பெய்யும்).
தீபாவளி திருநாள் அன்றைக்கான அறிவிப்பு
முதலில் தீபாவளி திருநாளன்று மழை எதிர் பார்க்கப்பட்டது ஆனால் குமரிக்கடல் அருகே நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நவ 14ஆம் தேதி அதிகாலை முதல் கிழக்கு திசை காற்று சற்று வடகிழக்கு திசையாக மாறும், இதன் காரணமாக மழை பொழிவு சற்று குறைந்து காணப்படும் , இருப்பினும் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும்(on and off spells).
நவ 14ஆம் தேதி அன்று அடுத்த சுற்று மழைக்கான அறிவிப்பு வெளியிடப்படும் .
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றி
Comments
Post a Comment