பருவமழை மீண்டும் தீவிரமடைகிறது கடந்த வாரம் தமிழகம் முழவதும் பரவலாக நல்ல மழை பதிவானது. அதன் பின் பருவமழை சற்று நின்று இருந்தது. தற்பொழுது பருவமழை மீண்டும் புயல் வடிவில் புத்துயிர் பெற்றுள்ளது. வங்க கடலில் உருவாகும் நிவார் புயல் (உச்சரிப்பு வேறுபடலாம்) தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை. நவ 19ஆம் தேதி , தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவானது , அது நவ 20ஆம் தேதி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவானது . இத்தழ்வானது இன்று மேலும் வழுவடைந்து ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருகிறது. மேலும் தீவிரமடையும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆனது வரும் 12 முதல் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுப்பெ...